“ஷுப்மன் கில் கண்டிப்பாக பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார்…” முன்னாள் தேர்வுக்குழு தலைவர் உறுதி!

வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:26 IST)
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல்  இரண்டு போட்டிகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

காய்ச்சல் காரணமாக இந்திய அணியோடு டெல்லி செல்லாத அவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம்தான் நேரடியாக அகமதாபாத் சென்றார். அவர் அங்கு சுமார் ஒருமணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சனிக்கிழமை போட்டிக்கு முன்னர் அவர் தன்னுடைய உடல்தகுதியை நிரூபித்தால் அவர் அந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கில் பற்றி பேசியுள்ள முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே ப்ரசாத் பேசும்போது “கில்லுக்கு பதிலாக மாற்று வீரரை யோசிக்கவே இல்லை. அவருக்கு லேசான காய்ச்சல் இருந்து அதில் இருந்து குணமாகியுள்ளார். அவர் கண்டிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்