சவூதி அரேபியாவில் டாக்ஸி ஓட்டுனர்கள் இன்று முதல் சீருடை அணிவது கட்டாயமாக்கப்படுவதாக நத நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சவூதி அரேபிய போக்குவர்த்துப் பொது ஆணையம் அறிவித்துள்ளதாவது: சீருடை அணியாமல் வாகனம் ஓட்டுனர்களுக்கு 500 ரியால் அபராதம் விதிக்கப்படும். மேலும் சாம்பல் நிறச் சட்டை, பெல்ட், கருப்பு கலர் பேண்ட் அல்லது சவூதி உடை( தோப்பு) அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.