இந்தியா மற்றும் 15 நாடுகளுக்கு செல்ல தடை - சவூதி அதிரடி!

திங்கள், 23 மே 2022 (10:44 IST)
சவூதி அரேபியா தனது குடிமக்கள் இந்தியா மற்றும் 15 நாடுகளுக்குச் செல்வதைத் தடை செய்துள்ளது. 

 
கடந்த சில வாரங்களாக தினசரி கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சவுதி அரேபியா தனது குடிமக்கள் இந்தியா உட்பட பதினாறு நாடுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.
 
இந்தியாவை தவிர லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மேனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் சவுதி குடிமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
பயணத் தடை குறித்து சவுதி அரசு தெரிவித்துள்ளதாவது, மேற்கூறிய நாடுகளுக்குச் செல்ல விரும்பும் சவுதி குடிமக்களுக்கு இந்த தடை பொருந்தும். மேலும், சவுதி அரேபியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்