போனுக்காக சாக்கடை அள்ளிய சிறுவன்; லாப்டாப் வழங்கி நெகிழ வைத்த உதயநிதி!!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (09:29 IST)
ஸ்மார்ட்போனுக்காக சாக்கடை அள்ளிய சிறுவனுக்கு லாப்டாப் வழங்கியுள்ளார் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின். 
 
சென்னையில் உள்ள கொடுங்கையூர் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் சாமுவேல் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள ஸ்மார்ட்போன் இல்லததால் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக பிரபல நாளிதழில் செய்தி வெளியானது. 
 
இந்த செய்து சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, சாமுவேலின் ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப் மற்றும் டேட்டா கார்டை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 
 
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னை கொடுங்கையூர் 10 ஆம் வகுப்பு மாணவர் சாமுவேல். ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. போன் வாங்க இவர் சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக நாளிதழில் செய்திவந்தது. அவரின் ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப் - டேட்டா கார்டை அண்ணன் சேகர்பாபு ஏற்பாட்டில் இன்று வழங்கினோம் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்