அடிச்சான்ல அப்பாயிண்ட்மெண்ட் ஆடர... சென்னை மேயர் உதயநிதி?

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (15:14 IST)
சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு விருப்பமனு தாக்கல் செய்தார்.
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக தரப்பில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் களமிறங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்ததை போலவே, சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
ஆம், தி.நகர் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். 
 
உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் நிலையில், நடந்து முடிந்த இரு இடைத்தேர்தல்களின் போது இவரது பெயர் வேட்புமனு தாக்கலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு முறை உதயநிதி வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும் இந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்