உனக்கு தகுதி கிடையாது ...உன் மன்னிப்பை உன் துணைவியாரிடமே சொல்... அமைச்சருக்கு அன்பழகன் பதிலடி

வியாழன், 14 நவம்பர் 2019 (14:34 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் சிறை வைக்கப்பட்டது குறித்து , அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் மா.பா. அன்பழகன் மற்றும் சிலர் விமர்சனங்கள் எழுப்பிய  நிலையில், இன்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ,மிசா வழக்கில் ஸ்டாலின் கைதாகவில்லை எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பிய அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் மன்னிப்புக் கேட்க முடியாது எனத் தெரிவித்தார்.
 
இதுகுறித்து, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன்   தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
மிசா என்ற பெயரை சொல்ல உனக்கு தகுதி கிடையாது. நாலு கட்சி மாறி வந்த உனக்கு அரசியலில் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்ததே என்று வருத்தப்படுகிறேன். உன் மன்னிப்பை கொண்டுபோய் உன் துணைவியாரிடமே சொல்.  @mafoikprajan என அமைச்சார் பாண்டியராஜனுக்கு  பதிலடி கொடுத்துள்ளார்.
 
இரு கட்சிகளும் இந்த மாதிரி கருத்து மோதலில் ஈடுபடுவது பெரும்  அரசியல் களத்திலும், சமூக வலைதளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மிசா என்ற பெயரை சொல்ல உனக்கு தகுதி கிடையாது. நாலு கட்சி மாறி வந்த உனக்கு அரசியலில் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்ததே என்று வருத்தப்படுகிறேன். உன் மன்னிப்பை கொண்டுபோய் உன் துனைவியாரிடமே சொல். @mafoikprajan

— J Anbazhagan (@JAnbazhagan) November 14, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்