444 மரணங்களை மறைத்த 420கள்: உதயநிதி டுவீட்டால் பரபரப்பு

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (06:57 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை 444 விடுபட்டுவிட்டதாகவும், அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும்  சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, நிகழ்ந்த மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இவை வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த 444 இறப்புகளையும் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களில் சேர்க்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விடுபட்ட 444 மரணங்களுக்கு கொரோனாவால் நிகழ்ந்தவையாக கருதி, அந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, கொரோனா மரணங்களை மறைக்காதே என்றால் அய்யோ அரசியல் செய்கிறார்கள் என்ற 420கள் மார்ச் முதல் விடுபட்ட 444 கொரோனா மரணங்களை இன்று சொல்கின்றனர். இறந்தவர்களின் உடல்களை  அடக்கம் செய்தது யார்? தொற்றேதும் பரவியதா? நீங்கள் அடிக்கடி மாற்றும் எஜமானர்கள் போல மனித உயிரொன்றும் துச்சமில்லை அடிமைகளே’ என்று தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்