துணை முதல்வர் பங்களாவுக்கு குடியேறும் உதயநிதி ஸ்டாலின்.. அடுத்தது அதுதானா?

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (18:07 IST)
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக மு க ஸ்டாலின் இருந்தபோது தங்கி இருந்த பங்களாவுக்கு குடியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக எம்எல்ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் ஆக பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை சந்திக்க துறை சார்ந்த அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் தினமும் வருவதால் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் குடியேற உதயநிதி முடிவு செய்துள்ளார். 
 
துணை முதல்வராக மு.க ஸ்டாலின் இருந்தபோது தங்கி இருந்த குறிஞ்சி பங்களாவில் குடியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அவர் விரைவில் துணை முதல்வராகவும் பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்