எடப்பாடிய உள்ள தூக்கி போடுங்க.. உதயநிதியிடம் முறையிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

வெள்ளி, 17 மார்ச் 2023 (15:16 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த உதயநிதியிடம் எடப்பாடியை பிடித்து உள்ளே போடுங்க என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காலமானதை அடுத்து இரங்கல் தெரிவிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்றனர். 
 
ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் இரங்கல் தெரிவித்துவிட்டு விடை பெற்று திரும்பும் போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்து கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை பிடித்து உள்ள போடுங்க என்றும் கொடநாடு கொலை வழக்கில் அவர்தான் குற்றவாளி என்றும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சிரித்து கொண்டே கேட்டு உதயநிதி ஸ்டாலின் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்