மாணவர்கள் பாதிக்காத வகையில் நீட் குறித்து முடிவு - உதயநிதி உறுதி

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (15:01 IST)
நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 

 
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஆய்வு குழு அமைக்கப்பட்டு நீட் தொடர்பான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. நீட் தேர்வு தொடர்பான தங்கள் கருத்துகளை மக்கள் அனுப்ப இன்றே கடைசி நாள். 
 
இந்நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மாணவர்களின் மனுவை ஏ.கே.ராஜனிடம் அளித்த எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் கொள்கை என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்