திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து: உதயநிதியின் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:23 IST)
தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் வாக்குறுதி தருவதும் வெற்றி பெற்றவுடன் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதும் தமிழகம் உள்பட இந்திய அரசியலில் சர்வ சாதாரணம் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் விடப்பட்டுள்ளன. குறிப்பாக திமுக வெற்றி பெற்றால் நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதிகள் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்
 
நீட் தேர்வை ரத்து செய்வது என்பது மத்திய அரசின் அதிகாரத்தில் இருக்கும் நிலையில் மாநில அரசின் ஆட்சியை பிடிக்கும் ஒரு முதல்வர் எப்படி ரத்து செய்ய முடியும்? அது சாத்தியமா? என்பதை உதயநிதி விளக்கம் வேண்டும் என்று கூறி வருகின்றனர். 
 
ஏற்கனவே திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ரத்து செய்வது என்பது சாத்தியமா? அப்படியே தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டால் மருத்துவப்படிப்பு செல்லாது என்பது உதயநிதிக்கு தெரியாதா? என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்