சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து! நீதிமன்றம் அதிரடி!

செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:16 IST)
சித்த மருத்துவர் தணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பியதை அடுத்து அவர் குண்டர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டார்.

சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வந்து மக்கள் பீதிக்கு ஆளான நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் என்பவர் சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடவடிக்கை எடுத்தனர். இதன் விளைவாக தற்போது அந்த சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதில் குண்டர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரின் தந்தை அவர் மீதான குண்டர் சட்டத்தை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை நீக்கி அறிவித்தனர். மேலும் இந்தியாவில் மற்ற மருத்துவ முறைகளை போலவே சித்த மருத்துவமும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். குண்டர் சட்டம் ரத்தாகியுள்ளதால் திரு தணிகாசலம் விரைவில் ஜாமீனில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்