வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உதயநிதி டுவீட்!

புதன், 10 பிப்ரவரி 2021 (17:49 IST)
வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உதயநிதி டுவீட்!
பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
சுதந்திர வேட்கையையும் உயிர் தியாகம் செய்து மண்ணிற்காக போராட்டம் செய்த மன்னர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போராடிய காரணத்தினால் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த 1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை கட்டியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள போடி என்ற நகரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது
 
தெற்குச் சீமையில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக சிம்மசொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுடைய தேனி (வ)- போடியில் உள்ள திருவுருவச் சிலைக்கு மரியாதை செய்தேன். மக்கள் நலன் காக்கும் போரில் மாண்ட கட்டபொம்மன் அவர்களின் வீரம்-தியாகத்தை என்றும் போற்றுவோம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்