சிறுவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய உதயநிதி !வைரல் புகைப்படம்

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (23:35 IST)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று பிரசாரத்திற்குச் சென்ற உதயநிதி அங்குள்ள சிறுவர்கள் கிரிக்கெட் பேட் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளதாக உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு பக்கமும், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கமும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தாலும் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்துக்காக ஆண்டிபட்டி வந்திருந்த உதயநிதியிடம் திடீரென சிறுவர்கள் சூழ்ந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். உதயநிதி ஸ்டாலின் அந்த கோரிக்கை மனுவை எடுத்து படித்து பார்த்த போது தங்களுக்கு கிரிக்கெட் பேட் வேண்டும் என்று அந்த மனுவில் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து காரிலிருந்து இறங்கிய உதயநிதி சிறுவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டதோடு கண்டிப்பாக கிரிக்கெட் பேட் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.

அதன்படி சிறுவர்களுக்கு பேட், பந்து வாங்கிக் கொடுத்துள்ளதாக உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேனி(தெ)-ஆண்டிப்பட்டி தொகுதி கன்னியப்பிள்ளைப்பட்டியில் பேரன்புடன் வாகனத்தை வழிமறித்த சிறுவர்கள் கிரிக்கெட் பேட் வாங்கித்தரச்சொல்லி உரிமையுடன் கோரிக்கை வைத்தனர். அவர்களின் விருப்பப்படி கிரிக்கெட் பேட் வாங்கித்தந்து மகிழ்ந்தேன். அவர்களின் மகிழ்ச்சி மனநிறைவைத் தந்தது எனத் தெரிவித்துள்ளார்.
@CumNRamaksinan

தேனி(தெ)- கம்பம் தொகுதி-சின்னமனூரில் அன்போடு வரவேற்ற பொதுமக்களிடம், 'இப்பகுதியில் பாதாள சாக்கடை- உழவர்சந்தை போன்ற திட்டங்களை கொண்டு வந்தது யார் ஆட்சி?' என்றேன். ‘கழக ஆட்சிதான்’ என்றவர்களிடம், இதுபோன்ற நல்ல திட்டங்களை கொண்டுவர கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றேன்.@CumNRamaksinan pic.twitter.com/rBAIXVvXx2

— Udhay (@Udhaystalin) February 9, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்