ப்ரியா மரணம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 மருத்துவர்கள் தலைமறைவு

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (11:34 IST)
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை செய்ததன் காரணமாக அவர் மரணமடைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு மருத்துவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்பட்ட நிலையில் ப்ரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
 
பணியிடை நீக்க உத்தரவை அவர்களிடம் வழங்க சென்ற போது தான் இருவரும் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால்ராம் சங்கர் ஆகிய இருவரும்தான் பிரியாவுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் என்றும் இந்த இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்