இதனால் அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது காலில் சதை அழுகியிருப்பதாகவும் காலையே அகற்ற வேண்டும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து எனவும் கூறியுள்ளனர். இதனால் அவரது கால் அகற்றப்பட்டுள்ளது. சரியான சிகிச்சை அளிக்காததே மாணவி காலை இழக்க காரணம் என அவரது பெற்றோர்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவிக்கு செயற்கை கால்கள் பொருத்தவும், அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.