ஆபாசமாக திட்டிய இயக்குனர்: போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த நடிகைகளால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (22:14 IST)
ஆபாசமாக திட்டிய இயக்குனர்
தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு ஒன்றில் இயக்குனர் ஒருவர் நடிகையை ஆபாசமாக திட்டியதை அடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகைகள் ஒட்டுமொத்தமாக போலீஸ் ஸ்டேஷன் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை வானகரத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு இன்று நடைபெற்று வந்தது. அப்போது துணை நடிகை ஒருவர் சரியாக நடிக்கவில்லை என்று அந்த சீரியல் இயக்குனர் நீராவி பாண்டியன் என்பவர் அவரை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது
 
இதனால் அந்த நடிகை மட்டுமன்றி அந்த சீரியலில் நடித்துக் கொண்டே மற்ற நடிகைகளும் ஆத்திரமடைந்து உடனடியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி, காவல் நிலையத்தில் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்கள்
 
இந்த புகாரை அடுத்து இயக்குனர் நீராவி பாண்டியனை அழைத்து போலீசார் விசாரித்த போது அவர் நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க ஒப்புக்கொண்டார். இதனால் இந்த பிரச்சனை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்