செந்தில் பாலாஜி பெரிதாக எந்த பிரச்சனையும் மேற்கொள்ளாமல் சைலெண்டாக திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.எல்.ஏ ஆகிவிட்டார். ஆனால் தங்க தமிழ்செல்வன், தினகரனை பற்றி சில பல விமர்சனங்களை முன்வைத்து பின்னர் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தங்க தமிழ்செல்வன் தினகரன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்செல்வன் கூறியதாவது, அதிமுகவில் நான் இருந்த போது பாராளுமன்ற தேர்தலில் 6000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனேன். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என அதைவிட்டு வெளியேறினேன்.
அதன் பின்னர் அமமுக எனும் டிடிவி தினகரன் வழிநடத்திய கட்சியில் பயணித்தேன். ஆனால் மக்கள் அந்த கட்சியை விரும்பவில்லை, ரசிக்கவில்லை. செத்த பாம்பை அடிக்க கூடாது என சொல்லுவார்கள். எனவே நான் கட்சியை பற்றியும் அவரை பற்றியும் பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.