பக்காவா ஸ்கெட்ச் போட்டு இறங்கி அடிக்கறோம்... வேற லெவல் ப்ளானில் தினகரன்!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (10:58 IST)
டிடிவி தினகரன் கட்சி குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு அதை செயல்படுத்த தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார்.  
 
ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.
ஆனால் தற்போது அவர் இந்த தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆம், உள்ளாட்சி தேர்தலில் பக்காவா ஸ்கெட்ச் போட்டு இறங்கி அடிக்க தனது தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார். அதோடு தேர்தலுக்கான வியூகங்களையும் வகுத்துவிட்டாராம். 
 
இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத்தேர்தலில் அமமுக எந்தெந்த தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதோ அந்த தொகுதிகள் மீது உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் உள்ளாட்சி தேர்தல் வியூகம் போல... 
 
அந்த வகையில், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களையும், தஞ்சை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களையும் கைப்பிடிக்க வேண்டும் என கணக்குப்போட்டுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்