சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: டிடிவி தினகரன் வாழ்த்து..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (10:33 IST)
இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று. 
 
எட்டையபுர மன்னரின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து, மன்னர்,பாமர மக்கள் உள்ளிட்டோர் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக  போரிட்டவர் அழகுமுத்துக்கோன் அவர்கள்.
 
அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிரைவிடுவோம் என வீர முழக்கமிட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த இந்த நன்நாளில் அவரது விசுவாசம், அர்ப்பணிப்பு, தியாக உணர்வு  ஆகியவற்றை  நினைவு கூர்ந்து போற்றுவோம்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்