சட்டசபையில் ருசிகரம்: ஸ்னாக்ஸ் கொடுத்த திமுக எம்எல்ஏ; மறுத்த தினகரன்!

செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:00 IST)
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இது தான் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனின் முதல் சட்டசபை கூட்டம் ஆகும்.
 
இந்த கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று திமுக உறுப்பினரான தளி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஸ்னாக்ஸ் அளித்தார். ஆனால் டிடிவி தினகரன் திமுக உறுப்பினர் பிரகாஷ் அளித்த ஸ்னாக்ஸை வாங்க மறுத்துவிட்டார்.
 
டிடிவி தினகரனுக்கு சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் அமரும் இருக்கைகளுக்கு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எடப்பாடி அணியினர் டிடிவி தினகரன் திமுக உடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், திமுகவினருடன் அவர் பேசுவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்