டிடிவி தினகரன்... திக்..திக்.. தினகரன்: தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் தீர்ந்தது!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (16:45 IST)
ஆர்கே நகர் தேர்தலில் பலமுனை போட்டிகள் நிலவுகின்றன. நேற்று முடிவுற்ற வேட்புமனுத் தாக்கலில் 127 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.


 
 
இதில் முக்கியமான வேட்பாளார்களான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
 
ஆனால் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரனின் வேட்பு மனுவை ஏற்க தேர்தல் அலுவலர் தயக்கம் காட்டி வருகிறார். இந்த மனு மீதான பரிசீலனையை ஆட்சேபனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
டிடிவி தினகரன் மீது அன்னிய செலவானி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் அவர் சிங்கப்பூர் குடிமகன் என நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் வழக்கு ஒன்றில் அவருக்கு நீதிமன்றம் தண்டனையாக 28 கோடி அபராதம் விதித்துள்ளது.
 
நீதிமன்றம் 28 கோடி அபராதம் விதித்துள்ள நிலையில் தினகரன் தன்னிடம் 11 லட்சம் அசையும் சொத்தும் 57 லட்சம் அசையா சொத்தும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் திவாலானவர் என குறிப்பிட்டு அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக 60 பக்கம் மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.
 
இதனால் அவரது வேட்புமனுவில் ஆட்சேபனை இருப்பதால் அதனை நிறுத்தி வைத்துள்ள தேர்தல் ஆணையர் பின்னர் முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் சற்று முன்னர் அவரது வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் நிலவி வந்த குழப்பம் நீங்கி டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான சிக்கல் நீங்கியது.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தேர்தல் அலுவலரிடம் டிடிவி தினகரன் சார்பாக கொடுக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து அவருக்கான இந்த திடீர் சிக்கல் நீங்கியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இதனை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை. பின்னர் இதுகுறித்த தகவல் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் திமுக வேட்பாளர் மருதுகணேஷின் இந்த புகாரை தேர்தல் அலுவலர் நிராகரிப்பதாக ஆணை பிறப்பித்ததாக தினகரன் தரப்பு தளவாய் சுந்தரம் கூறினார்.
அடுத்த கட்டுரையில்