தனது பிரச்சாரத்தின் போது உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து கிடந்தார் என பேசினார். அத்தோடு விட்டா அந்தம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என பேசினார். இந்நிலையில் இது குறித்து டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில்,
நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி. பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது என அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.