அமமுக வேட்பாளர் ஜனவரி 4 –ல் அறிவிக்கப்படுவார் – டிடிவி அதிரடி

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (12:41 IST)
திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் குறித்த விவரம் ஜனவரி 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவித்தவுடனேயே அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர் தேர்வை ஆரம்பித்தனர். அதுமட்டுமில்லாமல் விரைவிலேயே வேட்பாளர் விவரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தன. ஆனால் இடைத்தேர்தல் மன்னனான டிடிவி மட்டும் தங்கள் கட்சியின் வேட்பாளர் குறித்து அரிவிக்காமல் மௌனமாக இருந்தார்.

இந்நிலையின் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அமமுக வேட்பாளர் யாரென்பது ஜனவரி 4 ஆம் தேதி அறிவிக்கப்ப்டும் என்றார். அதிமுக தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் மரண விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது குறித்து கேட்கப்பட்டபோது ஜெயலலிதா மருத்துவ விவகாரத்தில் ஓபிஎஸ் தான் தவறிழைத்தார் என்றும். அதிமுக அமைச்சர்கள் அடிக்கடி டெல்லி செல்வதின் மர்மம் என்ன எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்’

திமுக, அதிமுக வை அடுத்து அமமுக வும் வேட்பாளர் குறித்து அறிவித்து விட்டதால் திருவாரூர் இடைத்தேர்தலி மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்