இப்படி இருக்க தனது 19 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் , இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு, செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றது, சசிகலா சிறை, தேர்தல் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு போன்றவற்றால் சிக்குண்டிருக்கிறார் டிடி.வி. தினகரன்.
தேர்தல் நெருங்விட்டாலும் இன்னும் பதற்றமில்லாமாலேயே இருக்கிறார். ஆனால் இத்தனை துயரத்தின் மத்தியில் அவருக்குள்ள ஒரே ஆறுதல் தற்போது பாமகவில் இருந்து அமமுகவிற்கு வந்துள்ள நடிகர் ரஞ்சித்.தேர்தலில் ரஞ்சித் மற்றும் தினகரனின் துதிபாடிகளால்தான் இன்னமும் தான் ஜெயிக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லா தேர்தல்களும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலைப் போன்றே இருக்காதல்லவா?