பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகனுக்கு புதிய பதவி!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (17:59 IST)
பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகனுக்கு புதிய பதவி!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு தற்போது புதிய பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் திருச்சி சிவா என்பதும் அவர் திமுகவின் எம்பியாக பல வருடங்கள் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவருக்கு பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்