பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகம்?

Mahendran

செவ்வாய், 14 மே 2024 (11:15 IST)
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்  சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் வெளியானது.
 
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை 8,11,172 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், தேர்ச்சி சதவீதம் 91.71 என அறிவ்க்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் 4.04 லட்சம் பேரும் மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
மேலும் அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.09 சதவீத தேர்ச்சியும்  பெற்றுள்ளன.  11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை மாவட்டம்  96.02 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.   
 
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்