தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்..!

Siva

செவ்வாய், 14 மே 2024 (11:37 IST)
திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். அவர் ஆஜரானதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 75% நிதியை, தயாநிதிமாறன் செலவு செய்யவில்லை என தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். ஏப்ரல் 15ம் தேதி தேர்தல் பிரசார கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதை எதிர்த்து தயாநிதிமாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
 
முன்னதாக  95 சதவீதத்துக்கு மேல் தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளதாக விளக்கம் அளித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் அவகாசம் முடிந்ததால் அவர் சொன்னபடியே வழக்கும் தொடர்ந்தார். தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கு குறித்து தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியை 95% மேல் பயன்படுத்தியுள்ளேன்.  தொகுதி மேம்பாட்டு நிதியை 75%  பயன்படுத்தவில்லை என புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி  பேசியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்