பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில்.. ஜூன் முதல் ஒரே டிக்கெட்..!

Mahendran

செவ்வாய், 14 மே 2024 (11:04 IST)
சென்னை நகர பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய மூன்றுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரே டிக்கெட் என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூன் இரண்டாம் வாரம் முதல் இந்த டிக்கெட் அமல்படுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஒரே டிக்கெட்டில் சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகியவற்றில் பயணம் செய்வது குறித்த டிக்கெட் டெண்டர் ஜூன் மாதம் முடிவடைய உள்ளதாகவும் ஒரு நபர் அடுத்தடுத்து இந்த மூன்று சேவைகளை பயன்படுத்தும் போது வேறுபட்ட டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஒருங்கிணைந்த டிக்கெட் என்ற நடைமுறையை ஜூன் மாதம் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது

க்யூஆர் குறியீடு மூலம் டிக்கெட் வழங்கும் முறையை அமல்படுத்த 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பொதுவான டிக்கெட் முறைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறிய அதிகாரிகள் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு ஒரே டிக்கெட்டில் சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றில் பயணம் செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்