சென்னை ஆவடி அருகே புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதை அடுத்து வந்தே பாரத், பெங்களூர் டபுள் டக்கர் உள்பட பல ரயில்கள் தாமதமாக கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை ஆவடியில் புறநகர் ரயிலின் நான்கு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு உள்ளன. சென்னை அண்ணனூர் பணி மணியிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதாகவும் ரயில் ஓட்டுனர் துவங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த ரயில் விபத்து காரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் நிறுத்தி இடையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை - பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் உள்பட பல ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்னும் கிளம்பவில்லை என்றும் கூறப்படுகிறது