அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

Prasanth K

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (17:57 IST)

திருநெல்வேலியில் நடந்து வரும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் திமுக பிரபலம் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் கூட்டணி அமைத்தல், கட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்துவது குறித்து இன்று திருநெல்வேலியில் பாஜக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசி வருகிறார்.

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் பாஜகவில் இணைந்த பிறகு பேசிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் “தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், மணல் கொள்ளை, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் என திமுகவினர் தொடர்ந்து ஊழல் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஊழல் இல்லா ஆட்சி அமைய வேண்டும். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்