ரயில்வே கேட் அருகே விளையாடிய மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (12:52 IST)
கடலூர் மாவட்டத்தில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்து ஓட்டுனர்  மாணவர்களை ஏற்றிக் கொண்டு, பெத்தாங்குப்பம் கிராம வழியாக ரயில்வே பாதை வழியாகச் சென்றார்.

அப்போது, ரயில்வே பாதை வழியில் ரயில் செல்வதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இந்தப் பள்ளி வாகனும் அங்கு நின்றது.

பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

பேருந்தினுள் இருந்த பள்ளி மாணவர்கள் விளையாட்டாக பேருந்து  ஹேண்ட் பிரேக்கை நீக்கிவிட்டனர். இதனால்,பேருந்து பின்னோக்கிச் சென்று அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ள மக்கள் மாணவர்ளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்