பிணத்தை பாலத்தில் தொங்கவிட்டு.. சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற அவலம்!

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:58 IST)
வேலூர் மாவட்டத்தில்  வாணியம்பாடி அருகே உள்ள பகுதியில் சுடுகாட்டுக்குச் செல்ல பாதைகள் இல்லாத நிலையில், சடலத்தை சற்று வித்தியாச முறையில் சுடுகாட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உள்ளது நாராயணபுரம் என்ற கிராமம். இங்கு பட்டியலினத்தவர் அதிகம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கெனவே தனியாக சுடுகாடு  உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்கு இவர்கள் தூக்கிச் செல்கின்றனர்.
 
இந்நிலையில் சில் ஆண்டுகளுக்கு முன்னர் பாலாற்றங்கரையில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்தல் பாலாற்றின் இருமருங்கிலும் ஆற்றிற்குச் செல்லும் வழிகளை வேறு பிரிவு மக்கள் வேலி போட்டு தடுத்து உள்ளனர் . அதனால் இந்த நாராயணபுரம் மக்கள் சடலத்தை அவ்வழியில் தூக்கிச் செல்ல அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 
 
இப்படியிருக்க, சில நாட்களுக்கு முன்னர் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் இறந்தார். அவரது சடலத்தை அவ்வழியே கொண்டு செல்ல எதிர்ப்பு நீடித்ததால், அந்த பாலத்தில் இருந்து கயிற்றால் சடலத்தை கட்டி இறக்கி, அத்ஃபன் பின்னர் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து முதல்வருக்கு புகார் அளித்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்