சட்டமன்றத் தேர்தலே பிரதானம் … நாடாளுமன்றத் தேர்தலில் நிதானம் – டி ராஜேந்தர் அதிரடி !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (17:10 IST)
வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் டி.ஆர்.

லட்சிய திமுக என்ற கட்சியை நடத்திவரும் பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ஆர். இன்று தனது கட்சியின் உறுப்பினர்களிடத்தில் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து பதிலளித்தார்.

அவரது பேச்சில் ‘பொறுப்பாளர்களிடம் விவாதித்ததில், அவர்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆகவே இந்தத் தேர்தலில் லட்சிய திமுக சார்பில், வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான விருப்பமனுக்கள் பெறப்பட இருக்கின்றன’ எனத் தெரிவித்தார்.

மேலும் கூட்டணிக் குறித்த கேள்வியின் போது ‘ அதிமுகவில் இருந்து என்னை அழைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சொன்னார்கள். அதற்கு நான் உடன்படவில்லை. பிரச்சாரம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கும் நான் உடன்படவில்லை’ எனக் கூறினார்.

மேலும் சட்டமன்றத் தேர்தலே பிரதானம் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் காட்டுவோம் நிதானம் எனவும் அவர் பாணியில் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்