இந்நிலையில் இப்போது திருநங்கைகளும் தேர்தலை தள்ளி வைக்க சொல்லி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுசம்மந்தமாக மதுரையைச் சேர்ந்த திருநங்கைகள் செயற்பாட்டாளர் பாரதி கண்ணம்மா கூறியுள்ளதாவது ‘ஏப்ரல் 15 முதல் 17 வரை விழுப்புரத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் 6.5 லட்சம் திருநங்கைகள் பங்கேற்பார்கள். அவர்களால் மறுநாளே அவரவர் ஊருக்கு திரும்பி இயலாது. தேதியை மாற்றாவிட்டால் திருநங்கை சமூகத்தை புறக்கணித்ததாக ஆகிவிடும். எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.