ஆளுனரை திரும்ப அழைக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு உரை

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:41 IST)
நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை திரும்ப அழைக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் டி ஆர் பாலு உரை நிகழ்த்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நீட் மசோதா மீது ஐந்து மாதங்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து நாங்கள் பேசிய மறுநாளே நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் 
 
நீட் மசோதா திருப்பி அனுப்பியது குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய டி.ஆர்.பாலு,  நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து அவரை திரும்ப அழைக்க வேண்டும் என்று கூறினார் 
நீட் மசோதா திருப்பி அனுப்பியது தொடர்பாக டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் உரை எழுதிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்