ஹிஜாப் அணிந்து வந்த மாணவியருக்கு போட்டியாக காவித்துண்டு அணிந்த மாணவர்கள்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:34 IST)
ஹிஜாப் அணிந்து வந்த மாணவியருக்கு போட்டியாக காவித்துண்டு அணிந்த மாணவர்கள்!
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியரை கல்லூரிக்குள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போட்டியாக காவி துண்டு அணிந்து செல்ல அனுமதிக்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியரை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்து கல்லூரி நிர்வாகம் வாசலிலேயே நிறுத்தி வைத்தது இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்
 
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியர்களுக்கு போட்டியாக காவி துண்டு அணிந்து எங்களையும் அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மாணவர்கள் கல்லூரிக்கு படிக்க மட்டுமே வர வேண்டும் என்றும் மத அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக வரக்கூடாது என்றும் ஹிஜாப் ஆக இருந்தாலும் சரி காவியாக இருந்தாலும் சரி அனுமதி இல்லை என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்