இதனால் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.80க்கும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்கப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.