கிலோ ரூ.100 ஐ எட்டிய தக்காளி விலை..! – விலை குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு!

வியாழன், 19 மே 2022 (08:55 IST)
சென்னையில் கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இதனால் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.80க்கும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்