100 ரூபாயை தாண்டியது தக்காளி விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

செவ்வாய், 17 மே 2022 (07:30 IST)
கடந்த சில நாட்களாக தக்காளி விலை 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று நூறு ரூபாயை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 105 முதல் 115 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது 
 
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு ஆகியவையும் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது
 
தக்காளி விலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக இதே நிலையில் தான் இருக்கும் என்றும் கூறப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்