பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

Mahendran
வியாழன், 9 ஜனவரி 2025 (13:21 IST)
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தப்பட்டது.
 
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற இருக்கின்ற நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
 
இந்த நிலையில், பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலமை அலுவலகத்தில் நாளை, அதாவது ஜனவரி 10ஆம் தேதி, தமிழக வெற்றிக்கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை  கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட தலைவர்கள் மற்றும் அனைத்து தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்