நாளை தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (07:30 IST)
12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
 
ஏப்ரல் 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் ஏப்ரல் 13-ந் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.
 
தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண  காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் நடைபெறுகிறது.
 
திருக்கல்யாணத்திற்கு மறுநாள் ஏப்ரல் 15-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 
 
அதை தொடர்ந்து 16-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்