நாளை மீண்டும் மெகாதடுப்பூசி மையம்: வாய்ப்பை தவறவிட வேண்டாம் என அறிவிப்பு

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (18:36 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மெகா தடுப்பூசி மையம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தடுப்பூசியை மையங்கள் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறை ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தடுப்பு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதனை அடுத்து நாளை மீண்டும் தடுப்பு மையம் செயல்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
கோவை மாவட்ட கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை கோவை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என்றும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மற்ற மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்