நாளை வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு. மாஃபா பாண்டியராஜன்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (22:08 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது. அதிமுக சசிகலா அணியில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் இருந்தபோதிலும் ஓபிஎஸ் அணிக்கு முதன்முதலாக ஆதரவு கொடுத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.



ஓபிஎஸ் அணியின் ஒரு தூணாக இருந்து வரும் பாண்டியராஜன், அந்த அணியை வலுப்படுத்த பல திட்டங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அடுத்து வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று மாஃபா பாண்டியராஜன் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நாளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியின் புதிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்