சதமடிக்க காத்திருக்கும் தக்காளி; அதிர்ச்சியில் மக்கள்! - இன்றைய விலை நிலவரம்!

Prasanth Karthick
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:42 IST)

தமிழ்நாடு மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறையத் தொடங்கியுள்ள நிலையில் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

 

தமிழ்நாட்டில் உள்ள சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பல முக்கிய சந்தைகளுக்கு ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து நாள்தோறும் தக்காளில் உள்ளிட்ட பல காய்கறி லோடுகள் வந்துக் கொண்டிருக்கின்றன. சமீபமாக வெளிமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. குறைவான லோடுகளே வருவதால் தக்காளி விலை வேகமாக உயரத்தொடங்கியுள்ளது.
 

ALSO READ: பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் அஜித்! - அந்தமானில் செய்த சாதனை சம்பவம்!
 

கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வந்த தக்காளில் மெல்ல விலை உயரத் தொடங்கி ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி மொத்த விற்பனையில் சென்னை மார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனையாகி வருகிறது. சில்லரை விற்பனையில் கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்