கனமழை காரணமாக அண்டை மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்தது என்பதும் நேற்று தக்காளி விலை 80 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுவிடும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென நேற்றைய விலையில் இருந்து பாதியாக தக்காளி விலை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகமானதை எடுத்து 40 முதல் 45 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி தொடர்ந்து தக்காளி அதிக அளவு வரத்து இருக்கும் என்பதால் பெரிய அளவில் தக்காளி விலை ஏற்றம் இருக்காது என்றும் கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்