மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், சுங்கச் சாவடிகளில் புதிய கட்டண நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.
அதில், அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுங்கக் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது:
'ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்
மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் பிரதமர் மோடிக்கு அப்படி என்ன ஒரு ஆனந்தம்?
உள்ள டோல்கேட்டுக்கே பணம் கட்ட மக்கள் அவதிப்படும் நேரத்தில் மீண்டும் டோல் கட்டணம் உயர்வா?
வரி வரி வரி! மோடி ஆட்சியில் GST, Toll, ஆடம்பர வரி. ….சாதாரண மக்களுக்கு வரி விதிப்பு, பெருமுதலாளிகளுக்கு வரி குறைப்பு.
மக்களே விழித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.