இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

புதன், 22 மே 2024 (13:53 IST)
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மே நான்காம் தேதியில் இருந்து அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பமானது என்பதும் சில நாட்கள் மட்டுமே அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திய நிலையில் அதன் பின் திடீரென தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் கோடையின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களின் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே தமிழகத்தில் கனமழை காரணமாக கடந்த 16ஆம் தேதியிலிருந்து நேற்று வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்