5 நாட்களுக்கு கொளுத்த போகும் கடும் வெயில்! 6 மாநிலங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

Prasanth Karthick

புதன், 22 மே 2024 (13:10 IST)
இந்தியாவில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



கடந்த ஏப்ரல் மாதம் முதலாக இந்தியாவின் பல பகுதிகளில் கோடைக்காலம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் வெப்பநிலை அதிகமாக இருந்த நிலையில் சமீப காலமாக பெய்து வரும் கோடை மழை காரணமாக வெப்பநிலை சற்றே குறைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவின் 6 மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிப்பதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை தாண்டக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை வாய்ப்பும், குறைவான வெப்பநிலையுமே பதிவாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்