தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.